குட் நியூஸ்... அல்சைமர் நோயின் தீவிரத்தைக் குறைப்பதில் வயாக்ரா பெஸ்ட்... ஆய்வில் தகவல்!

 

உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பலர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான மருந்தை கண்டுபிடிக்க மருத்துவ விஞ்ஞானிகள்  பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதற்காக பல தசாப்த காலமாக தேடல்கள் மருத்துவ உலகில் நடைபெற்று வருகின்றன.  
அந்த வகையில் ஆச்சர்யமான உண்மை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி வயாக்ரா மாத்திரை   தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு அல்சைமருக்கான பாதிப்புக்கள் குறைவாகவே இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வயாக்ரா  மாத்திரையை பொருத்தவரை உடலுறவில் நீடித்த இன்பத்திற்காக எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரை. இதே மாத்திரையை உலகம் முழுவதும்  இளைஞர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். 
அல்சைமரால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதித்த போது வயாக்ரா மாத்திரை எடுத்துக் கொண்டவர்கள்  வாழ்க்கையின் பிற்பகுதியில் டிமென்ஷியாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 18 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  


அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் PDE5 இன்ஹிபிட்டர் ,  அவனாஃபில், வர்தனாபில், தடாலாஃபில் மற்றும் சில்டெனாபில் போன்ற வயாக்ரா மாத்திரைகளை உட்கொண்டவர்கள்.  இது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டது.  தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் சுமார் 55 மில்லியன் மக்கள் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வயாக்ரா மாத்திரைகள்  மூளையில் இருந்து மாறுபட்ட புரதங்கள்   மற்றும் புதிய மருந்துகள் நோயை மெதுவாக்கும் என்பதை நிரூபித்து வருகின்றன.  முதன் முதலில் முதலில், வயக்ரா ஆஞ்சினா மற்றும் உயர் இரத்த அழுத்த சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க