undefined

மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார்!

 

மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் டின் ஓ உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். 

ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் இணை நிறுவனர் டின் ஓ., உடல் நல குறைவு காரணமாக கடந்த மே மாதம் 29ம் தேதி யாங்கோன் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் காலமானார். அவருக்கு வயது 97. 

முன்னாள் ராணுவ தளபதியான டின் ஓ, ராணுவ ஆட்சிக்கு எதிரான புரட்சி தோல்வி அடைந்த பிறகு, 1988ல் ஆங் சான் சூகியுடன் இணைந்து மியான்மரின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியை தொடங்கினார். கட்சியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். 

ஆங் சாங் சூகி போலவே டின் ஓவும் 2010 பொதுத் தேர்தலுக்கு முன்பாக விடுவிக்கப்படுவதற்கு முன், 21 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் சிறையிலும், வீட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். 2020ல் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதும், ஆங் சாங் சூயை போல டின் ஓ கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!