undefined

  பிரபல பாடகி சாரதா காலமானார்... ரசிகர்கள் அதிர்ச்சி... திரையுலகினர் இரங்கல்!

 

பத்ம பூஷண் விருதுபெற்ற பிரபல நாட்டுப்புறப் பாடகி சாரதா சின்ஹா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 72. 

பாடகி சாரதா சின்ஹா ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு தேவையான மருத்துவ வசதிகளையும் செய்து தர பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்ததுடன் அவர் பூரண நலம்பெற விரும்புவதாக தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் பாடகி சாரதா சின்ஹா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகன் அன்ஷுமன் சின்ஹா நேற்று நள்ளிரவு தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தின் பாரம்பரிய இசையை வெளியுலகுக்கு கொண்டு சேர்த்ததில் இவரது பங்கு அளப்பரியது.

போஜ்புரி, மைத்திலி, மகாஹி ஆகிய மொழிகளில் பல்வேறு பாடல்களைப் பாடி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் இவரை ‘பீகார் கோகிலா’ என அவரது ரசிகர்கள் பாடகி சாரதாவை செல்லமாக அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!