வெங்கடேஷ் பண்ணையாரின் 21வது நினைவு தினம்.. திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி!
திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேஷ் பண்ணையாரின் 21-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன்புரத்தில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 21-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் அவரது குடும்பத்தின் சார்பில் பொங்கல் வைத்து, படையல் படைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் விளக்கு பூஜையும் நடந்தது.
நிகழ்ச்சிகளில் என்.வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவியும், முன்னாள் எம்பியுமான ராதிகா செல்வி மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். மேலும் அருகில் உள்ள வெங்கடேஷ் பண்ணையாரின் சொந்த கிராமமான மூலக்கரையில் அன்னதானம் நடைபெற்றது. வெங்கடேச பண்ணையார் நற்பணி இயக்கம் சார்பில் வெங்கடேஷ் பண்ணையாரின் ரதம் மூலக்கரையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அம்மன்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வந்தது.
நிகழ்ச்சிகளில் என். வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி மன்ற தலைவரும், வெங்கடேஷ் பண்ணையாரின் சகோதரருமான எஸ்.ஏ.சுபாஷ் பண்ணையார், பொதுச் செயலாளர் ஓடை செல்வம், மாநில வக்கீல் அணி அமைப்பாளர் சிலுவை, அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் துணைத் தலைவர் மாநில சிவ செல்வராஜ், நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ், ஆறுமுகநேரி நகர நிர்வாகிகள் கிளாட்சன், இசக்கிமுத்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா,
சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் தலைமையில் மாநில துணைப் பொதுச் செயலாளர் காமராசு நாடார், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விஸ்வநாதன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ்,
ஆறுமுகநேரி வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர் தாமோதரன், காயல்பட்டினம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் முகமது அப்துல் காதர், திருச்செந்தூர் சுற்று வட்டார நாடார் வியாபாரிகள் சங்கத் தலைவர் காமராசு, ஆத்தூர் சுற்றுவட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கத் தலைவர் சதீஷ்குமார், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர்கள் கரு தாசராஜன், சசிகலா புஷ்பா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாவட்ட நகரத் தலைவர் ஆறுமுகநேரி முருகேச பரண்டியன், உள்பட திரளானோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!