undefined

சர்வதேச திரைப்பட விழாவில் ‘வேம்பு’ திரைப்படம் தேர்வு!

 

அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள ‘வேம்பு’ படத்தில் மெட்ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி படங்களில் நடித்த  ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா  கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. 

பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதுடன். எப்பொழுதும் காவல்துறையோ, அரசாங்கமோ, தனிப்பட்ட நபரோ  பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க முடியாத சூழலில் ,  ‘ ஒரு பெண் தனிமையில் இருக்கும் போது எப்படி துணிச்சலாக தன்னை பாதுகாத்து கொள்ளலாம்  என்கிற ஒரு விஷயத்தையும் இந்தப்படம் சொல்கிறது.

இந்தப் படத்தின் இறுதிப்  பணிகள் நிறைவடைந்து தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் விரைவில் நடைபெற உள்ள அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்தப்படம் தேர்வாகி உள்ளது.

சிறந்த கதை அம்சம்கொண்ட யதார்த்தமான திரைபடங்களை மக்கள் வெற்றி பெற செய்து வருகின்றனர். அதே போன்ற எதார்த்த சினிமாக்களின் வரிசையில் இதுவும் இருக்கும்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!