திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குவியும் வாகனங்கள்.. .சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் கிடையாது... வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
நாளை நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை முதலே வாகனங்கள் குவிந்து வருகின்றன. நாளை முதல் அடுத்து வரும் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை தினங்கள் என்பதால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கி பயணப்படுகின்றனர். ரயிலில் டிக்கெட் கிடைக்காத நிலையில் பலரும் கார், வேன் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலும், அரசுப் பேருந்து, ஆம்னி பேருந்துகளிலும் பயணித்து வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் 12,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள், மினி பேருந்துகளில் மட்டுமின்றி தனியார் வாடகை வாகனங்கள், கார்களிலும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
இந்த ஆண்டு சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் சென்னையை விட்டு வெளியேறுவதால், சுங்கச்சாவடிகளில் கூட்டம் அதிகமாகவும், சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சுங்கச்சாவடிகளில் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அதிக ஸ்கேனர்களைப் பயன்படுத்துதல் மற்றும் அதிக வாகனங்கள் செல்லும் திசையில் அதிக ஊழியர்களை ஈடுபடுத்துதல் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஆயுதபூஜை விழாவின் போது, போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில், சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டு, வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டது. அதேபோல், தீபாவளி பண்டிகையின் போதும், கட்டுப்பாடற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில், கட்டணத்தை விலக்கி, வாகனங்களை இலவசமாக அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மாலை முதலே தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் அதிகமிருந்து வருவதால் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படாமல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருவது வாகன ஓட்டிகளை உற்சாகப்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க