undefined

”லியோ” வில் வனிதா விஜயகுமார் மகன் ஸ்ரீஹரி ... வைரலாகும் புகைப்படம்!!

 

அக்டோபர் 19ம் தேதி இளையதளபதி விஜய்யின் லியோ திரைப்படம் வெளியானது. லியோ திரைப்படம்  கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்  வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   இந்தப் படத்தில் நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹரி இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


ஸ்ரீஹரி தன்னுடைய அம்மாவான வனிதாவை பிரிந்து   தந்தையோடு இருந்து வருகிறார். அவர் சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில் 'லியோ' திரைப்படத்தில் நடிகர் விஜய், ஸ்ரீஹரி குழந்தையாக இருக்கும்போது அவரை மடியில் வைத்து எடுத்த புகைப்படம் ஒன்று காட்டப்ப்டுகிறது. லியோ   திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய், நடிகர் அர்ஜுனிடம் நான் லியோ இல்லை என்பதை நிரூபிப்பதற்காக சில புகைப்படங்களை காட்டுகிறார்.  

அதில் தன்னுடைய மகனின் முதலாவது பிறந்தநாள் புகைப்படம் என ஒரு புகைப்படத்தை காட்டுகிறார். அது ஸ்ரீஹரியோடு விஜய் எடுத்த புகைப்படம் தான். தற்போது இந்த புகைப்படம் தான் சமூக வலைதளங்களில்  வெளியாகி வைரலாகி வருகிறது.  தற்போது ஸ்ரீஹரி சில குறும்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கெனவே நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'சகுனி'  திரைப்படத்திலும் கார்த்தியின் சிறு வயது கேரக்டராக ஸ்ரீஹரி நடித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!