undefined

 இன்று முதல் 12 நாட்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்!

 

இந்தியா முழுவதும் நீண்ட தூர சொகுசு பயணங்களுக்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே  பாரத் ரயில் என்றாலே பயணிகளுக்கு கூடுதல் ஸ்பெஷல் தான். இது வழக்கமான பயணமாக இல்லாமல் சற்று வித்தியாசமான வகையில்  சொகுசு வசதிகளும் அதிவிரைவு பயணமும் சாத்தியமாகியுள்ளது.  ரயில்வே துறையில் புகுந்துள்ள நவீன வசதிகள் அனைத்தையும் வந்தே பாரத் ரயிலுக்குள் கொண்டு வந்துள்ளது இந்திய ரயில்வே.

வந்தேபாரத் ரயில்கள் மூலம் இந்தியாவின் அனைத்து  முக்கிய பகுதிகளையும் இணைக்க இந்தியன் ரயில்வே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இவை படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு இடையே வாரம் மூன்று நாட்களுக்கு திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் வழியே 12 நாட்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு ஜூலை 31 இன்று, ஆகஸ்ட் 2, 4, 7,9, 11, 14, 16, 18, 21, 23, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் ஆகஸ்ட் 1,3, 5, 8, 10, 12, 15, 17, 19, 22, 24, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்ய முன் பதிவு தொடங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!