undefined

 அதிகாலையில் சோகம்...  வேன் மரத்தில் மோதி  6 பேர் சம்பவ இடத்திலேயே மரணம்; 16 பேர் படுகாயம்!

 
 

இன்று அதிகாலையில் பெரும் சோகமாக உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர இருந்த மரத்தின் மீது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சுற்றுலா வாகனம் மோதி கோர விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். திருச்செந்தூரில் சாமி கும்பிட்டுவிட்டு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேட்டத்தூர் எனும் இடத்தில் கனமழை காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இவர்களது சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில்  16 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருநாவலூர் போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை முண்டியம்பாக்க அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, காயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!