undefined

என்ன கொடுமை சரவணன்? இந்த 5 நாடுகளில் காதலர் தினம் கொண்டாடத் தடை..!

 

நாளை மறுநாள் பிப்ரவரி 14ம் தேதி புதன்கிழமை காதலர் தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.   இந்நிலையில்,  குறிப்பிட்ட   5 நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டணை உண்டு என்பது கூடுதல் தகவல்.  காதலர் தினத்தில்   காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி கொள்வர்.   குறிப்பிட்ட இந்த 5 நாடுகளில் மட்டும்  காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணமும் உண்டு.  


மலேசியா: 


மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால்  காதலர் தினம் கொண்டாட இங்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
 
சவுதி அரேபியா: 


சவூதி அரேபியாவில்  காதலர் தினத்தை கொண்டாடினால் கைது செய்யப்படுவார்கள் .  இதனால் இளைஞர்கள் மிக மோசமாகி விடுகின்றனர் என்ற நம்பிக்கை இந்நாட்டில் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.   

ஈரான்: 


ஈரானில் 2010ற்கு பிறகு   காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அரசு இதை தார்மீக சீரழிவு விழாவாக அறிவித்துள்ளது. அத்துடன்   காதலர் தினம் தொடர்பான பரிசுகள் மற்றும் பொருட்களை கூட விற்பனை செய்வதும் தண்டணைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.  

பாகிஸ்தான்: 
 

பாகிஸ்தானிலும் இஸ்லாமிய கருத்துக்கு எதிராக   காதலர் தினத்தை அறிவித்துள்ளது. இதனையடுத்து  காதலர் தினம் பாகிஸ்தானில் எங்கும் கொண்டாடப்படுவதில்லை. 
  
உஸ்பெகிஸ்தான்: 


உஸ்பெகிஸ்தானில் பாபரின் பிறந்தநாளை பிப்ரவரி 14 அன்று கொண்டாடுகிறார்கள். இதன் அடிப்படையில் 2012க்குப் பிறகு காதலர் தினம் தடை செய்யப்பட்டுள்ளது. உஸ்பெஸ்கிஸ்தான் பொதுமக்கள்  பாபரை தங்கள் ஹீரோவாகக் கருதுகிறார்கள்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க