வைகாசி அமாவாசை : ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்... திடீரென கடல் உள்வாங்கியதால் அலறியடித்து ஓட்டம்!

 

இன்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு புனித நதிகளிலும், ஆறுகளிலும் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்ய குவிந்து வருகின்றனர். தென்னகத்தின் காசிக்கு நிகரான ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்த நிலையில், ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி,  தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி ராமநாதசுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திடீரென ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதில், கரையில் தர்ப்பணம் கொடுக்க திரண்டிருந்த பக்தர்கள் அலறியடித்தப்படி ஓட்டம் எடுத்தனர்.

பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில், தீர்த்தம், மூர்த்தி, தலம் என்ற முப்பெருமையை கொண்டது. இங்கு ராமாயணத்துடன் தொடர்புடைய ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அமைந்துள்ளது. இங்கு, அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என்பது ஐதீகம்.

அமாவாசை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திடீரென கடல் உள்வாங்கியதால் அந்த பகுதியில் போலீசார் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!