undefined

1,50,000 மாணவர்களின் கல்விகடன் ரத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி! 

 

அமெரிக்காவில் கல்வி கடன் பெற்றிருக்கும் 1,50,000 மாணவர்களிள் அனைத்து கல்விக்கடனையும் ஜோ பைடன் நிர்வாகம் தள்ளுபடி செய்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் இளங்கலை பட்டப்படிப்புக்கு கல்விக்கட்டணம் மிக அதிகம். கல்விக்கட்டணத்தை பெரும்பாலான பெற்றோர்களால் கட்ட முடியாததால், பெரும்பாலான மாணவர்கள் பள்ளிப் படிப்புடன் மேற்படிப்பைத் தொடராமல் வேலைக்கு சென்று விடுகிறார்கள். படிப்பின் மீதான ஆர்வமுள்ளவர்கள் வங்கிகளில் கல்விக்கடன் பெற்று கல்லூரிப் படிப்பைத் தொடர்கிறார்கள். ஆனாலும், தங்களது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்து விட்டு, வேலைக்கு செல்லும் போது அவர்களின் முன்பாக கல்விக்கடன் பெரும் சுமையாக நிற்கிறது. 

இந்நிலையில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் தகுதியுடைய கிட்டத்தட்ட 1.53 லட்சம் பேருக்கு 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான மாணவர் கடன்களை தனது நிர்வாகம் ரத்து செய்வதாக அதிபர் ஜோ பிடன் புதன்கிழமை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிடென், 430 பில்லியன் டாலர் மாணவர்கள் கடனை ரத்து செய்வதற்கான அவரது பரந்த திட்டத்தை ஜூன் மாதம் உச்ச நீதிமன்றம் தடுத்த பிறகு, கடன் நிவாரணத்தைச் சமாளிப்பதற்கான பிற வழிகளைக் கண்டுபிடிப்பதாக உறுதியளித்தார். தற்போது கல்விக்கடன்களை் ரத்து செய்துள்ளார்.

நிர்வாக நடவடிக்கைகள் மூலம் கிட்டத்தட்ட 3.9 மில்லியன் மாணவர்களுக்கு சுமார் 138 பில்லியன் டாலர் கடனை பைடன் நிர்வாகம் ரத்து செய்துள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மதிப்புமிக்க கல்வியில் சேமிப்பு (சேவ்) எனப்படும் திருப்பிச் செலுத்தும் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு சமீபத்திய அறிவிப்பு பொருந்தும் மற்றும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக பணத்தை திருப்பிச் செலுத்தும் 12 ஆயிரம் டாலர் அல்லது அதற்கும் குறைவாக கடன் வாங்கியவர்களுக்கு இது பொருந்தும்.வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜோ பைடன் நிர்வாகத்தில் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!