உக்ரைன் அதிபருடன் கருத்து மோதல்.. புதிய தளபதியை நியமித்தார் ஜெலன்ஸ்கி..!

 

ரஷ்யாவுடனான உக்ரைனின் போர் மூன்றாம் ஆண்டை எட்டியுள்ள நிலையில், உக்ரைனின் தரைப்படைகளின் முன்னாள் தளபதி கர்னல் ஜெனரல் அலெக்சாண்டர் சிர்ஸ்கி, தற்போது ஆயுதப்படைகளின் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசிய வீரராக  கொண்டாடப்பட்ட வலேரி சலுஷ்னி, இதற்கு முன் ஆயுதப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்தார்.

சமீபத்தில் ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் பின்னடைவைச் சந்தித்ததால், ட்ரோன்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் மூலம் மிகப்பெரிய ரஷ்ய இராணுவத்துடன் உக்ரைன் போட்டியிட முடியும் என்று வலேரி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும், போராளிகளுக்கு அதிக தேவை இருப்பதாகவும், சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த பேச்சால் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் வலேரிக்கும் இடையே கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்தது. இந்த நிலையில் தான் ஆயுதப்படை தளபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்த பதவிக்கு கர்னல் ஜெனரல் அலெக்சாண்டர் சிர்ஸ்கி தலமை தாங்கி வருகிறார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க