undefined

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது 18 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!

 

ராஜஸ்தானில் 35 அடி ஆழ ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமி 18 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டார். 

ராஜஸ்தானின் தௌசாவில் உள்ள பாண்டிகுய் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுமி 35 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளார். தௌசா மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார், காவல் கண்காணிப்பாளர் ரஞ்சிதா சர்மா, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.


மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டு முன்னேற்றம் ஏற்படாத நிலையில், SDRF மற்றும் NDRF குழுக்கள் வரவழைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், 18 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். 

முன்னதாக 35 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தைக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு, தொடர்ந்து சிறுமியின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வந்தது.