undefined

மின்கம்பத்தில் மோதிய இருசக்கர வாகனம்.. தபால் நிலைய ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பார்சனாபள்ளி ஊராட்சிக்குட்பட்ட அங்கியாபள்ளி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (37) இவர் பார்சனாபள்ளி பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று இரவு தனது அண்ணன் பூபாலன் மகள் தனுஶ்ரீ பிறந்த நாளுக்காக தனுஸ்ரீயின் தம்பி ஹரிஷ் (3) மற்றும் அசோக்குமாரின் மற்றொரு அண்ணன் சீனு மகன் பவன்குமார் (13) ஆகிய இருவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு ஆம்பூர் சென்று பிறந்தநாள் கேக் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய போது சாமுண்டியம்மன் தோப்பு அருகில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மூன்று வயது சிறுவன் ஹரிஷை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் இந்த விபத்தில் பவன்குமார் காயங்கள் இன்றி உயிர்தப்பிய  நிலையில் அண்ணன் மகள் பிறந்த நாளுக்காக கேக் வாங்கி வர சென்றபோது மின்கம்பத்தில் மோதி தற்காலிக தபால் நிலைய ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம்  குறித்து தகவல் அறிந்த உமராபாத் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

தபால் நிலைய தற்காலிக ஊழியர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. மேலும் கரும்பூர்- அரங்கல்துருகம் செல்லும் சாலையில் சாமுண்டி அம்மன் தோப்பு அருகில் குறுகிய வளைவு பாதையில் சாலையோரம் உள்ள மின்கம்பத்தினால் அடிக்கடி இது போன்ற விபத்துகள் ஏற்படுவதாகவும், இது குறித்து மின்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும்  எந்த வித நடவடிக்கையும் எடுக்காததே இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!