எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்.. தனியார் நிறுவனத்துக்கு சீல் வைத்து அதிரடி!
சென்னை குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரியை சேர்ந்தவர் கிரிதரன் (34). இவரது மனைவி பவித்ரா (31). கிரிதரன் குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிகிறார்.இவர்களுக்கு வைஷ்ணவி (6), சாய் சுதர்சன் (1) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கிரிதரன் வீட்டில் எலிகள் அதிகம் உள்ளதால் எலிகளை ஒழிக்க தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அதையடுத்து, டி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தை அணுகி, அந்த நிறுவன ஊழியர்கள் வீட்டில் எலி மருந்தை வைத்ததாக கூறப்படுகிறது.
குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பவித்ரா, கணவர் மற்றும் குழந்தைகளுடன் படுக்கையறைக்கு சென்று ஏசி போட்டு தூங்கினார். ஆனால், நேற்று (நவ.14) காலை வீட்டில் உள்ள அனைவருக்கும் சற்று அசௌகரியம் ஏற்பட்டு மூச்சு திணறல் மற்றும் வாந்தி ஏற்பட்டது.இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கிரிதரன், பவித்ரா மற்றும் இரண்டு குழந்தைகளை குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுமி வைஷ்ணவி மற்றும் சிறுவன் சாய் சுதர்சன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கிரிதரனும், பவித்ராவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எலி மருந்தை வைத்திருந்த சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த 3 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.இதுமட்டுமின்றி, இச்சம்பவத்தில் ஈடுபட்ட நிறுவன ஊழியர்கள் தினகரன், சங்கர் தாஸ் ஆகிய 2 பேரையும் குன்றத்தூர் போலீஸார் கைது செய்துள்ள நிலையில், நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் தனியார் (பெஸ்ட் கண்ட்ரோல்) நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!