undefined

தமிழகத்தில் கேரள லாட்டரி விற்பனைச் செய்து வந்த 2 பேர் கைது!

 

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனை செய்த  இருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் காதர் மீரான் நகர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். 

அதில், சத்யா நகரை சேர்ந்த ராமேஷ்குமார் (33), விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த விஜயபாண்டி (29) என்பதும், தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்றதும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து செல்போன், கேரள லாட்டரி எண்கள் எழுதி வைத்திருந்த தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!