undefined

என் மனம் நிறைந்த நன்றி... தவெக தலைவர் விஜய் ட்வீட்!

 

 தமிழகத்தில் அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம்  மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநில அரசியல் மாநாடு  பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  மாநாடு முடிந்து 2 நாட்களுக்கு பிறகு விஜய் அவரது எக்ஸ் பக்கத்தில், தனது தவெக கட்சித் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,”மாநாடு நடத்த பல்வேறு காரணங்களால் நமக்குக் கிடைத்தது மிகக் குறைந்த கால இடைவெளிதான். எல்லாவற்றையும் சமாளித்து, சூறாவளியாகச் சுழன்று, நம் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வெற்றிபெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.


மாநாட்டிற்கான நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்திட அனுமதி மற்றும் ஒத்துழைப்பு நல்கிய, சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. கடிதங்கள் வாயிலாக வெளியிட்ட என் வேண்டுகோள்களை ஏற்று தங்கள் வீடுகளில் இருந்தே வெற்றிக் கொள்கைத் திருவிழாவைக் கண்டுகளித்த அனைத்துத் தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி”, என பதிவிட்டுள்ளார்.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!