undefined

 7 மணிக்குள் தவெக மாநாட்டை முடிங்க... காவல்துறை கெடுபிடி!

 
 

 தமிழ்த்தாய் வாழ்த்துடன் தவெக மாநாடு தொடங்கியது. இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழியை  கட்சியின் பொருளாளர் வெங்கட் ராமன் வாசித்தார். அதில், “தமிழக வெற்றிக்கழகம், பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும். விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணிலிருந்து வீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னை தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்புள் தனிமனிதராக செயல்படுவேன்.


மக்களாட்சி, மதச்சார்பின்மை , சமூக நீதிப்பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக் பணியாற்றுவேன் என உறுதியளிக்கிறேன். சாதி மதம் பாலினம் ,பிறந்த இடம் ஆகிவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன்” என ஏற்கப்பட்டது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தற்போது விழுப்புரம் மாவட்டம்  விக்கிரவாண்டியில் நடைபெற்று வருகிறது. மிக  பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.  இந்நிலையில் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் கூட்டம் அதிகம் உள்ளதால் மாநாட்டை முன்கூட்டியே முடிக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. தொண்டர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரவு 7 மணிக்கு முன்பாக மாநாட்டை விரைந்து முடிக்க வேண்டும் என கட்சித் தலைமைக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைவடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறியுள்ளதாகத் தெரிகிறது.