undefined

  எனது நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு  என்னுடைய வாழ்த்துக்கள்.. துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின்!

 


 தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல்  மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.  இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, இன்று அதிகாலை முதலே அதிகளவிலான தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவியத் தொடங்கினர்.

  கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக கட்சி சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில்   வெற்றி பெற்றவர்களுக்கு இன்று சென்னை கலைஞர் அரங்கில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில்  திமுக இளைஞரணி சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்து நடத்தினார்.


இந்த விழாவில் தவெக மாநாடு, விஜய் குறித்து பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், “நான் முதலில் தயாரித்த படமே அவர் படம் தான். யார் வேண்டுமெனாலும் அரசியலுக்கு வரலாம், மக்கள் பணியில் எப்படி ஈடுபடுகிறோம் என்பதே முக்கியம். விஜய் நீண்ட கால நண்பர், அவரது புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்” என  தவெக மாநாடு குறித்த கேள்விக்கு துணை முதல்வர்  உதயநிதி பதில்அளித்துள்ளார்.   
 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!