நீதிமன்றத்தில் பரபரப்பு.. 24 லட்சம் குடும்பத்திற்கு ரூ.1,455 கோடி நிவராணம்.. தமிழக அரசு விளக்கம் !

 

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையான ரூ.6,000 வரவு வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 1,455 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.நிவாரண உதவி தேவை என பெறப்பட்ட 5 லட்சத்து 28 ஆயிரத்து 933 விண்ணப்பங்களை ஆய்வு செய்து மொத்தம் 1,187 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாக சுமார் 53 ஆயிரம் குடும்பங்களுக்கு 31 கோடியே 73 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், தமிழகம் தொடர்ந்து நிவாரணம் வழங்குவது தொடர்பாக முழு விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்