undefined

ஷாக் வீடியோ... TTF வாசன்  மீது கொலை முயற்சி!

 


தமிழகத்தில் கோவை மாவட்டத்தில்வசித்து வரும் பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன். இவர் சிறந்த பைக் ரைடரும் கூட.  தனது யூடியூப் சேனலை மெருகேற்றிக் கொள்ள பைக் ரைடிங் செய்து அந்தப்பயணம் குறித்து வீடியோக்களை பதிவேற்றம் செய்து  வந்தார். அவருக்கு சமூக வலைதளத்தில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் இருந்து வந்தனர்.  அதே நேரத்தில் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த டிடிஎஃப் வாசனின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது.

ஆபத்தான பைக் சாகச வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த டிடிஎஃப் வாசன் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் வழக்கமான ஒன்றாகி வருகிறது. அந்த வகையில்  இந்த முறை டிடிஎஃப் வாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், போதையில் சிலர் என்னை கத்தியால் குத்தி கொலை செய்ய வந்ததாக கூறியுள்ளார். கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில உள்ள சிறிய ஓடையில் தனது நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது போதையில் வந்த நபர் ஒருவர் இங்கே குளிக்கக்கூடாது, இது எங்களுக்கு சொந்தமான இடம் என கூறியதாவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த போதை ஆசாமி பேசிக் கொண்டிருந்த போதே இரும்பு கம்பியால் தன்னை ஒருவர் குத்தியதாகவும், தான் லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பியதாகவும், தற்போது தான் உயிரோடு உள்ளதே கடவுள் புண்ணியம் எனவும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை