ஆட்டோ மீது லாரி மோதி பயங்கர விபத்து.. 10 பேர் பலி.. 6 பேர் படுகாயம்!
உத்தரபிரதேசத்தின் பில்கிராம் பகுதியில் ஆட்டோ மீது லாரி மோதியதில் பத்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், ரோஷான்பூர் கிராமத்திற்கு அருகிலுள்ள பில்கிராம் - மாதவ்கனஞ் சாலையில் லாரி மற்றும் ஒரு ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க விலகிய போது இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 6 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் லாரியை பறிமுதல் செய்துள்ளனர். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விபத்தில் உயிரிழந்தோர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். விபத்து குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!