undefined

பிரண்டையை இப்படி சாப்பிட்டுப் பாருங்க... மூட்டுவலி பிரச்சினைகள் பறந்தோடிடும்!

 

மூட்டு வலி பிரச்சினைகள் இருப்பவர்கள் பிரண்டையை இப்படி துவையல் செய்து சாப்பிட்டுப் பாருங்க. உடனடியாகவே பலன் தெரிய துவங்கும். பிரண்டையில் அபரிமிதமான கால்சியம் சத்துக்கள் உள்ளன. மூட்டு வலி பிரச்சினை உள்ளவர்கள் என்றில்லாமல் இப்போதுள்ள உணவு வகைகளை சாப்பிட்டு வருபவர்கள், 35, 40 வயதைத் தொட இருப்பவர்களும் தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறையாவது பிரண்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்

பிரண்டை - 1 கப்

உளுந்து - 2டீஸ்பூன்

கடலைப்பருப்பு- 1டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 5

புளி -சிறிதளவு

பூண்டு- 8

இஞ்சி- சிறு துண்டு 

 தேங்காய்-1/4மூடி

கறிவேப்பிலை- 1கொத்து 

வெந்தயம்-1டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு-1/2டீஸ்பூன் 

நல்லெண்ணெய்-தேவையான அளவு

உப்பு-தேவையான அளவு

பெருங்காயம் -1சிட்டிகை 

 செய்முறை:

பிரண்டையை  சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும். நறுக்குவதற்கு முன்பு கையில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கையில் தடவிக் கொள்ளவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம், சீரகம், உளுந்து  கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு,இஞ்சி  சேர்த்து வதக்கவும்.வாசம் வரும் வரை வறுத்ததும் புளி, கல் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து மறுபடியும்  வதக்கவும். பெருங்காயத்தூள் சேர்க்கவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு பிரண்டையை பச்சை வாசனை போக மிதமான தீயில் வதக்கவும்.ஆறியதும்  முதலில் பிரண்டையைச் சேர்த்து அரைத்த பிறகு  வதக்கிய பொருள்களையும் தேவையான அளவு நீர் விட்டு அரைக்கவும்.  வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து மறுபடியும் ஒரு முறை வதக்கவும். பிரண்டைத் துவையல் தயார். இதை இட்லி, தோசை, சப்பாத்திக்கு மட்டுமல்ல சாதத்திலும்  பிசைந்து சாப்பிடலாம்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா