சூப்பர்... ஒரே டிக்கெட்டில் பேருந்து , ரயில், மெட்ரோ 3லும் பயணம்! 

 

 சென்னையில் பொதுப்போக்குவரத்துக்கு  பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த 3 வகையான போக்குவரத்துக்கும் தனித்தனி டிக்கெட்கள். இதனை ஒரே டிக்கெட்டாக எடுத்துக்கொள்ளும் வகையிலும் பயணத்திட்டத்தை எளிமைப்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இத்திட்டம் 2025 மார்ச் முதல் அமலுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக வரும் டிசம்பர் மாதம் சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அடுத்து மின்சார ரயிலுக்கு விரிவாக்கம் ஒரே டிக்கெட்டில் 3 வகை பயணத்திற்கான செயலி உருவாக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தப்  பணிக்காக தனியார் நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கியது

சென்னையைப் பொறுத்தவரை பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் மூன்றிலும் பயணிப்பதற்கான ஒரே டிக்கெட் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.    அதன்படி தற்போது இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2024 தொடக்கத்தில் இந்த  நடைமுறை பயன்பாட்டு வரும் என   சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.


ஒரே பயணச்சீட்டு முறைக்கு என தனியாக செயலி உருவாக்கப்படும். இந்த செயலியில்  புறப்படும் இடம், சேரும் இடம் இவை பதிவு செய்யப்படும். அதன் பிறகு  பயணிக்க உள்ள போக்குவரத்து முறைகளை பதிவு செய்ய வேண்டும். 3 வகையான பயணங்களுக்கு ஒரே பயண சீட்டு அமலாவது இந்தியாலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. இந்த திட்டத்தை  முறையாக செயல்படுத்தி பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான டெண்டரை தனியார் நிறுவனத்திடம் விடப்பட்டுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!