undefined

செம.. இனி திருநங்கைகளும் காவல்துறையில் சேரலாம்!!

 

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி சார்பில்  முதல்வர் பகவந்த் மான்  ஆட்சி நடைபெற்று வருகிறது.   பஞ்சாப் காவல் துறையில் திருநங்கைகள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து   பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் செய்திக்குறிப்பில்  “திருநங்கைகள் சட்டம் 2019 ஐ அமல்படுத்துவதன் மூலம் காவல்துறை ஒரு கொள்கையை உருவாக்கியுள்ளது. திருநங்கைகளுக்கு சமவாய்ப்பு வழங்க வேண்டும்” என்பதே இதன் நோக்கம்.

இது குறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற ஒதுக்கப்பட்ட பிரிவினரைப் போலவே, திருநங்கைகளுக்கும் சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் காவல்துறை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடங்கியுள்ளது.  

எதிர்காலத்தில் திருநங்கைகளும் இதில் பங்குகொள்ளலாம். ஆட்சேர்ப்பு பணியில் பங்கேற்கும் திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும் சான்றிதழ் கட்டாயம்.  அவர்கள் வயது, விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற இடஒதுக்கீடு பிரிவினரைப் போல பிற தளர்வுகளைப் பெற முடியும். அதே நேரத்தில், அவர்கள் உடல் அளவீட்டுத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வு இவைகளில்  பெண்களுக்கு இணையாக திருநங்கைகள் கருதப்படுவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை