செம...  தமிழகத்தின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர்.. குவியும் வாழ்த்துக்கள்!

 

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து நேற்று பொறுப்பேற்றார். இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற பெருமையை பெற்றார்.

இதுகுறித்து திருநங்கை சிந்து பேசுகையில், "எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ரயில்வே பணியில் சேர்ந்தேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். ரயில்வே மின்துறையில் பணிபுரிந்தேன்.

இதற்கிடையில், ஒரு சிறிய விபத்தில் என் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மின் துறையிலிருந்து வணிகத் துறைக்கு மாற்றப்பட்டேன். டிக்கெட் பரிசோதகர் பயிற்சியை முடித்துவிட்டு டிக்கெட் பரிசோதகராக பதவியேற்று கொண்டேன். அது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. திருநங்கைகள் மனம் தளரக் கூடாது. கல்வி மற்றும் கடின உழைப்பால் எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் கொண்டு திருநங்கைகள் முன்னேற வேண்டும்,'' என்றார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க