undefined

  டிராய் அதிரடி... இனி "டேட்டா + கால்" இரண்டுக்கும் தனித்தனி ரீசார்ஜ்!  

 


 
இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களை பொறுத்தவரை டேட்டா மற்றும் கால் என இரண்டையும் சேர்த்த பேக்குகள் தான் சந்தையில் விற்பனையில் இருந்து வருகின்றன. இதனையே இதுவரை டெலிகாம் நிறுவனங்கள் வழங்கி வந்தன.  இதற்கு டிராய் எதிர்ப்பு தெரிவித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட நிலையில், ஏர்டெல் நிறுவனம் இப்போது புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி கடந்த சில ஆண்டுகளாகவே ஏர்டெல், ஜியோ  நிறுவனங்கள் டேட்டா மற்றும் கால் இரண்டுமே இருக்கும் வகையில் காம்போ ரீசார்ஜ் திட்டங்களை மட்டுமே அளித்து வந்தன.


இதனால் டேட்டா தேவையில்லை என சொல்வோரும் அதற்கும் சேர்த்தே பணம் கட்ட வேண்டிய சூழல் இருந்து வந்தது. இது குறித்து   பலரும் புகார் அளித்த நிலையில், டிராய் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. 
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையான டிராய் சமீபத்தில் மேஜர் வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது டேட்டா + வாய்ஸ் கால் இரண்டும் ஒன்றாக உள்ளபடி மட்டும் ரீசார்ஜ் பேக்குகளை வழங்கக்கூடாது எனவும்  தனித்தனி ரீசார்ஜ் பேக்குகளை டெலிகாம் நிறுவனங்கள் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை வழங்கி இருந்தது. 


அதாவது இனிமேல் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் இரண்டிற்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. எது தேவையோ அதற்கு மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏர்டெல் நிறுவனம் இப்போது வாய்ஸ் காலுக்கு மட்டும் தனியாகவும் டேட்டாவுக்கு தனியாகவும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி டேட்டா அல்லது வாய்ஸ் கால் இரண்டில் ஒன்று மட்டும் போதும் என்றால் அதற்கேற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் 
 ரூ.499க்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரீசார்ஜ் திட்டத்தில்  அன்லிமிடட் வாய்ஸ் கால்களும்,  900 இலவச எஸ்எம்எஸ்களும்   84 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் கிடைக்கும். இத்துடன் அப்பல்லோ 24/7 சர்க்கிள் மேம்பர்ஷிப் மற்றும் ஏர்டெல் ஹலோ ட்யூன் ஆகிய சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  
அதேபோல 1959 ரூபாய்க்கு மற்றொரு ரீசார்ஜ் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில் அன்லிமிடட் வாய்ஸ் கால் மற்றும் 3600 இலவச எஸ்எம்எஸ்கள் நமக்குக் கிடைக்கும் 
பழையபடி டேட்டா உடன் சேர்த்து தான் வேண்டும் என்பவர்களுக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் 7 ஜிபி டேட்டா, 900 எஸ்எம்எஸ்களுக்கு  விலை ரூ.548ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு பேக் விரும்புபவர்களுக்கு  ரூ.2249 மதிப்புள்ள பேக்கில் 30 ஜிபி டேட்டாவும் 3600 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். இதிலேயே அன்லிமிடட் கால் மற்றும்  அப்பல்லோ மெம்பர்ஷிப், ஹலோ டியூன் இலவசமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!