undefined

விடுமுறை தினத்தில் சோகம்... கிணற்றில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் மரணம்... விபரீதமான விளையாட்டு!

 

கடந்த சனிக்கிழமையில் இருந்து தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 3 தினங்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடுமுறை தினத்தில் கிணற்றில் குளிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் ஜான் என்கிற சாமுவேல் (12). கோவில்பட்டி லாயல் மில் காலனியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த இவர், கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியைச் சேர்ந்த இவரது  நண்பர் ஆகாஷ் (13) ஆகிய இருவரும் இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து கூசாலிபட்டியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர்.

அனைவரும் கிணற்றில் குதித்து நீச்சல் அடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, ஜான் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர். இதைப் பார்த்து சக நண்பர்கள் இருவரையும் நீண்ட நேரமாக தேடியும் கிணற்றில் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக இது குறித்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக கிணற்றில் இறங்கி போராடி நீரில் மூழ்கி இருந்த ஜான் மற்றும் ஆகாஷ் ஆகியோரை மீட்டனர். தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பள்ளி மாணவர்கள் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் கேள்விபட்டு உறவினர்களும், கிராம மக்களும் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். 

இது குறித்து நாலாட்டின் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை