undefined

சாலை வசதி இல்லாததால் நடத்த சோகம்.. பாம்பு கடித்த 13 வயது சிறுமி உயிரிழந்த பரிதாபம்!

 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது அலகட்டு மலை. இந்த மலையில் 40 குடும்பங்களை சேர்ந்த 100 பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த ருத்ரப்பா, சிவலிங்கி தம்பதியின் மகள் கஸ்தூரி (13). இவர் இன்று (28ம் தேதி) தனது வீட்டின் அருகே கீரை பறித்து கொண்டிருந்தார். அப்போது, ​​பாம்பு ஒன்று சிறுமியை கடித்தது. இதனால் அலறி துடித்த சிறுமியை மலை கிராம மக்கள் சிகிச்சைக்காக டோலியில் தூக்கி சென்றனர்.

அடர்ந்த வனப்பகுதி வழியாக சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மலை அடிவாரத்தில் உள்ள சீங்காடு பகுதியில் இருந்து ஆட்டோவில் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், ஆட்டோவில் ஏற்றிச் செல்ல முயன்றபோது சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது. எனவே, சிறுமியின் உடலை டோலி கட்டி மீண்டும் கிராமத்திற்கு கொண்டு சென்றனர். சிறுமியின் மரணம் அலகட்டு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அலக்கட்டு மலை கிராமத்திற்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என இக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். பாம்புக்கடி போன்ற அவசர காலங்களில் உயிரிழப்பதை தடுக்கும் வகையில், விரைவில் சிகிச்சை பெறும் வகையில், அலக்கட்டு மலை கிராமத்திற்கு சாலை வசதி செய்து தர வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற உயிரிழப்புகள் எங்கள் கிராமத்தில் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும் அலக்கட்டு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!