undefined

 கூகுள் மேப்பால் விபரீதம்...  50 அடி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் பாய்ந்த கார்... 3 பேர் மூச்சுத்திணறி பலி!  

 
 

வாகனங்களில் செல்லும்போது வழிப்போக்கர்களிடம் வழி கேட்கும் காலம் வழக்கொழிந்துவிட்டது. இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் கூகுள் வழி தான். வண்டியை ஸ்டார்ட் செய்யும்போதே ஜிபிஎஸ் ஆன் செய்துவிட வேண்டியது தான்.  அவ்வாறு ஜி.பி.எஸ்.வழிகாட்டுதலில் செல்லும்போது சில நேரங்களில்  விபரீதமான இடத்திற்கு வழிகாட்டிவிடும். அந்த வகையில்  உத்தரப் பிரதேச மாநிலத்தில் பரித்பூர் என்ற இடத்தில் ஆற்றில் இடிந்து போன மேம்பாலம் ஒன்று இருக்கிறது. ஆற்று நீர் செல்லும் இடத்தில் மேம்பாலம் இடிந்து  கடந்த மழையின் போது பாலம் இடிந்து விழுந்துவிட்டது.  

உடைந்த பாலத்தில் தடுப்பு இல்லை..நேற்று விவேக்குமார் என்பவரும் அவரது சகோதரர் மற்றும் நண்பர் என மூன்று பேர் காரில் அந்த வழியாக வந்தனர். அவர்கள் ஜி.பி.எஸ்.மூலம் பாதையை பார்த்தபடி காரை ஓட்டி வந்தனர். உடைந்திருந்த பாலத்தில் தடுப்பு எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் ஆற்றுப்பாலம் சரியாகத்தான் இருக்கிறது என்ற எண்ணத்தில் காரை வேகமாக ஆற்றுப்பாலத்தின் மீது ஓட்டியபோது, கார் உடைந்த மேம்பாலத்தில் இருந்து 50 அடி ஆழத்தில் பாய்ந்தது.  ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் சென்று கொண்டிருந்ததால்  கார் ஆற்றுக்குள் மூழ்கியது. இதனை பார்த்த கிராம மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆற்றுக்குள் மூழ்கிய காரை மீட்பதற்குள்   அதில் இருந்த 3 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.  இந்த விபத்துக்கு மாவட்ட நிர்வாகம்தான் பொறுப்பு என உயிரிழந்தவர்களின்  குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


"மேம்பாலம் சேதம் அடைந்திருக்கும் நிலையில், அதில் தடுப்பு வைத்து யாரும் செல்லாத வகையில் அடைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருந்துவிட்டது. பாலத்தின் வழியை நம்பி பயணம் செய்தவர்கள் பலியாகியுள்ளனர்" என உயிரிழந்தவர்களின்  குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி அஸ்தோஷ் சிவம் ,''காரில் பயணம் செய்தவர்கள் ஜி.பி.எஸ்.பார்த்துக்கொண்டே பயணம் செய்துள்ளனர். ஆனால் ஆற்றுப்பாலம் சேதம் அடைந்த தகவல் ஜி.பி.எஸ்.சில் அப்டேட் செய்யப்படவில்லை'' என தெரிவித்துள்ளார்.  கூகுள் மேப்பால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்து போன 3 பேரும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்ததாக  உறவினர்கள் தெரிவித்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!