undefined

 வாகன ஓட்டிகளே உஷார்... நாளை முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

 

 தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையடுத்து அப்பகுதிகளில்  நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக  சென்னை போக்குவரத்து காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  J-7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலையில் நாளை காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை 'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சியினை நடத்த 'டைம்ஸ் ஆப் இந்தியா '  நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேற்படி 'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.  

அதன்படி
ஆலந்தூர் மற்றும் ஜிஎஸ்டி சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் Sunshine School அருகில் வலது புறமாகத் திரும்பி எதிர்புறமுள்ள உள்ள வட்டச்சாலை வழியாகச் சென்று கைவேலி சந்திப்பில் "U" திருப்பம் செய்து ரயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று இலக்கைச் சென்றடையலாம். 


விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்வட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்பில் U- திருப்பம் செய்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை