undefined

வாகன ஓட்டிகளே உஷார்...  நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

 

 தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாளை ஆகஸ்ட் 31ம் தேதி சனிக்கிழமை பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. இதனையடுத்து சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை  போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை  ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1  தேதிகளில் இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் சென்னையில் நடக்கிறது.  இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் ரேஸ் நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. இந்த போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி  30.08.2024 முதல் 01.09.2024  பிற்பகல் 12.00 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருப்பதால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


அதன்படி  காமராஜர்சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்), ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம்.   மவுண்ட் ரோட்டில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.  சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும்.  காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை.  சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.  முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை. ஈவிஆர் சாலை, சென்ட்ரல் இரயில்வே நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்.  நாகர்கோவில்- தாம்பரம் ஸ்பெஷல் ரயில் நீட்டிப்பு கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள்: தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல பிற்பகல் 12.00 மணி முதல் 22.00 மணி வரை செல்ல தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த சர்க்யூட், தீவுத் திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் அமைந்துள்ளது.

 தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் எனபது குறிப்பிடத்தக்கது.  மெட்ரோ ரயில் மூலமாகச் செல்லலாம். மவுண்ட் ரோடு, அண்ணா சதுக்கம், பிராட்வே செல்லும் பேருந்துகளிலும் செல்லலாம். சொந்த வாகனங்களில் செல்பவர்கள் பார்க்கிங் செய்வதற்கான இடங்களும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஃபார்முலா 4 ரேஸ் அட்டவணை: ஃபார்முலா 4 கார் பந்தய போட்டிகளின் கால அட்டவணை, கிராண்ட்ஸ்டாண்ட் இருக்கை விவரங்கள், தீவுத்திடலில் உள்ள பார்வையாளர் மாடங்களின் விவரங்கள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.  ஆகஸ்ட் 31ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. மாலை 5.30 மணிக்கு  சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விளையாட்டை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடிய எந்த பொருளும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படாது. இந்த பொருட்களை சேமிப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. அவை அனைத்தும் பாதுகாப்பு சோதனை சாவடிகளில் பறிமுதல் செய்யப்பட்டு திரும்பத் தரப்பட மாட்டாது. மேலும் பிளேடுகள், கத்திகள், கத்திரிகோல், ஆயுதங்கள், பாக்கெட் கத்திகள், பெப்பர் ஸ்பிரே,பெரிய சங்கிலிகள், துப்பாக்கிகள், கத்திகள், ராணுவ கத்திகள் போன்றவை தடை செய்யப்பட்ட பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை