undefined

 இன்று முதல் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

 
 


 

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று நவம்பர் 30ம் தேதி  சனிக்கிழமை முதல், வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சோதனை அடிப்படையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து  வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சத்துவாச்சாரி மற்றும் காட்பாடி மார்க்கமிருந்து, கிரீன் சர்க்கிள் வழியாக பெங்களூர் செல்லும் வாகனங்கள், நேராக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  

மாற்றாக, பெங்களூர் மார்க்கம் செல்லும் வாகனங்கள், கிரீன் சரக்கிளிலிருந்து நேஷனல் சர்க்கின் சென்று, வலது புறம் திரும்பி. கலைமகள் பெட்ரோல் பங்க் சாலை வழியாக NH சர்வீஸ் சாலையை அடைந்து. தங்களின் பயணத்தை தொடரலாம்.  சித்தூர் மார்க்கம் மற்றும் புதிய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள், கிரீன் சர்க்கிளிலிருந்து நேஷனல் சர்க்கிள் சென்று, பூ-டர்ன் எடுத்து மீண்டும் கிரீன் சர்க்கிள் வந்து, தங்களின் பயணத்தை தொடரலாம்.


அதே போல் கிரீன் சர்க்கிளிலிருந்து சென்னை, சத்துவாச்சாரி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் நகரம் செல்லும் வாகனங்கள், நேராக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள்  கிரீன் சர்க்கிளிலிருந்து செல்லியம்மன் கோயில் சென்று, பூ-டர்ன் எடுத்து மீண்டும் கிரீன் சர்க்கில் வந்து, தங்களின் பயணத்தை தொடரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதி சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் போக்குவரத்து மாற்றத்திற்கு, பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  “ என  மாவட்ட காவல்துறையின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!