தொடர்மழையால் மண் சரிவு... 8 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து... வாகன ஓட்டிகள் அவதி!!

 

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை மணிக்கணக்கில் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏரி, குளம், கண்மாய், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தை, கேரளாவுடன் இணைக்கும் போடி மெட்டுச்சாலை பகுதியில் இரவு – பகலாக பெய்த தொடர் மழையால் 17வது கொண்டை ஊசி வளைவு அருகே மணப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென மண்சரிவு ஏற்பட்டது. மரங்களும் சாலையில் சாய்ந்தன. தகவல் அறிந்து போடி குரங்கணி போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரவு நேரம் என்பதால்  சீரமைப்பு பணிகளை செய்வதில் தொய்வு ஏற்பட்டது.  போடிமெட்டு, முந்தல் பகுதியில் அமைந்திருக்கும்  சோதனைச்சாவடிகளில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

இதனால், போடியில் இருந்து ஏலத்தோட்டத்திற்கு நேற்று அதிகாலையில் வேலைக்கு சென்றவர்கள்  பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் சாலையில் விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும் சாலையில் சரிந்த மண், வாகனங்கள் செல்லும் அளவிற்கு பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.    தற்போது மழைக்காலம் என்பதால் வாகன ஓட்டிகள் மலைச்சாலையில் எச்சரிக்கையுடன் செல்ல  காவல்துறை மற்றும் வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!