தீபாவளி எண்ணெய் குளியலுக்கு உகந்த நேரம் இது தான்... மிஸ் பண்ணீடாதீங்க... !!
நாளை இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக இந்துக்களின் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு அறிவியல் பூர்வமான நம்பிக்கைகளும், புராண சம்பவங்களும் வரலாற்று கதைகளும் இருக்கிறது. நாளை அமாவாசை திதியில் அதிகாலை எண்ணெய் குளியல் சகல சம்பத்துக்களையும் கொண்டு வந்து சேர்க்கிறது. நரகாசுரன் வதத்தை முன்னிட்டு நாளைய தினம் நல்லெண்ணெயில் மகாலட்சுமியும் வெந்நீரில் கங்கையும் எழுந்தருள்வதாக ஐதீகம். இதனால் அதிகாலை எண்ணெய் குளியலே சிறந்தது.
ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் கொண்டாடப்படும் தீபாவளி வாழ்வில் காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற அகஇருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகை. அதிகாலை 3 மணி – முதல் 6 மணிக்குள் வீட்டில் சுடு தண்ணீரில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
வீட்டில் செய்த இனிப்பு உணவுகளை மகாலட்சுமி சமேத மகா விஷ்ணுவிற்கு வெற்றிலை பாக்கு பழத்துடன் படைத்து அகல் விளக்கு ஏற்ற வேண்டும். புத்தாடைகளை மஞ்சள் தடவி பூஜையில் வைத்து அணிந்து கொள்ள வேண்டும். பெரியவர்களின் காலில் விழுந்து நல்லாசி பெற வேண்டும்.
இன்று மாலை லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பு. சதுர்த்தசி திதியும் சனிக்கிழமையும் இணைந்த தீபாவளி திருநாளில் செய்யும் லட்சுமி குபேர பூஜை மிக மிக சிறப்பு. லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் மாலை 5.30 மணி முதல் 8 மணிவரை . இந்த நேரங்களில் பூஜை செய்து வாழ்வின் எல்லா வளங்களையும் பெறுவோம்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!