இன்று மகாளய அமாவாசை... என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது?! எந்த நேரம் உகந்தது?
இன்று மகாளய அமாவாசை தினத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது என்று தெரிந்து கொள்ளுங்க. வருடத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வருகிறது என்றாலும் புரட்டாசி, ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசை தினங்கள் மிக முக்கியமானவை.
ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை தினத்தில் பித்ருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். அப்படி கிளம்புகின்ற பித்ருக்கள் மகாளாய அமாவாசை தினத்தில் பூலோகம் வந்தடைவர். மகாளய பட்ச காலத்தில் பூமியில் தங்கி அருள் புரிகிறார்கள். அமாவாசை தினத்தில் வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும். முன்னோர்களுக்கு திதி கொடுத்த பின் கோலமிடலாம். முன்னோர்கள் படங்களுக்கு துளசி சாற்ற வேண்டும்.
மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி ஆசிர்வதிக்கிறார்கள். மகாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணத்தை நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுக்கலாம். நமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து நமக்கு நல்லருள் புரிய வேண்டி வழிபாடு செய்வதே தர்ப்பணம்.
தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலையில் முன்னோர்களுக்கு படையல் போட்டு விட்டு, சாப்பிடலாம். அத்துடன் பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவு அளிப்பது கூடுதல் சிறப்பான பலன்களை தரும். இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். முன்னோர்களை துதிப்போம். அவர்களின் ஆசி பெற்று இன்புற்று வாழ்வோம்.
சாப்பிடுவதற்கு முன்னர் மூதாதையருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைக்க வேண்டும். முன்னோர்களுக்கு உணவைப் படைக்கும் முன்பு, யாரும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். அல்லது உணவு படைக்கும் வரை சாப்பிடாமல் இருந்து, விளக்கேற்றி, கற்பூர ஆராதானை செய்து பின்னர் சாப்பிடலாம்.
காகம் என்பது முன்னோர்களின் அம்சமாகக் கருதப்படுகிறது. எனவே, வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் முன்பு, உணவை காகத்துக்கு படைக்க வேண்டும். சாதம், காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நெய் சேர்த்து காகத்துக்கு படைப்பது சிறப்பு. காகங்கள் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால், முன்னோர்கள் சாப்பிட வந்திருப்பதாக ஐதீகம்.
இதனால், தோஷங்கள் நீங்கி, வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.காகம் வரவில்லை என்றாலோ, அல்லது உணவை சாப்பிடவில்லை என்றாலோ, உங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் ஏதோ குறையுடன் இருப்பதாக கருதப்படுகிறது.பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் போது, அவரவரால் இயன்ற அளவுக்கு, உணவு, ஆடை இவைகளை தானமாக வழங்கலாம். கால்நடைகளுக்கு உணவுகளை தானமாக வழங்கலாம். அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. அரிசி, தானியங்கள் தானம் செய்தால் மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!