undefined

நாளை சூரசம்ஹாரம்... தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு!

 
நாளை நவம்பர் 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திர்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய திருவிழாக்காளில் ஒன்றாக கந்த சஷ்டி திருவிழா திகழ்கிறது. இந்த திருவிழா கடந்த நவம்பர் 2ம் தேதி தொடங்கிய நிலையில், நவம்பர் 13ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது.

கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நவம்பர் 7 ம் தேதி நடைபெற உள்ளது. 

அலைகடலென திரளும் மக்கள் வெள்ளத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் மக்களும் திருவிழாவில் பங்கேற்க வசதியாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நவம்பர் 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் முக்கிய அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!