மிஸ் பண்ணாதீங்க... நாளை வானத்துல அதிசயம்... ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்களின் அணிவகுப்பு!
நாளை வானில் ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்கள் அணிவகுத்து வரும் அதிசயத்தைக் காணலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் மற்றும் புதன் ஆகிய கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நிற்கும் அதிசய நிகழ்வு நாளை ஜனவரி 21ம் தேதி நிகழவிருக்கிறது.
இது குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருப்பதற்குக் காரணம், இந்த கோள்கள் அனைத்தும் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பது மட்டுமல்ல, அந்தக் கோள்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலைவுகளில் சுற்றிக் கொண்டிருப்பதும் தான்.
இவ்வாறு ஏழு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நின்று, இரவு நேரத்தில் வானத்தில் ஓர் அழகிய அரை வட்டத்தை உருவாக்கிக் காண்பவர்களின் நினைவில் நீங்கா ஒரு அனுபவமாக இடம் பிடிக்க இருக்கிறது. இவை எல்லாம் ஒரே நாளில் நடக்கப் போவதில்லை.
2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் நிலவுக்கு மிக அருகே வெள்ளிக் கோளானது நிலை கொண்டிருக்கிறது. அதன் பிறகு, ஜனவரி 13ம் தேதி பௌர்ணமி நாளில் இருந்து செவ்வாய் கோளானது நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் வெள்ளியும், சனிக் கோளும் இதுவரை இல்லாத வகையில் நெருக்கமாக வந்து கொண்டிருக்கின்றன. இவை ஜனவரி 18ம் தேதி முதல் மிக அருகருகே நேர்க்கோட்டில் வந்துள்ளது.
சூரியன் மறைந்து, முழுவதும் இருள் சூழ்ந்த பிறகு உள்ளூர் நேரப்படி நாளை இரவு 8.30 மணி முதல் பார்க்கலாம். ஆனால், வெள்ளி, சனி மற்றும் நெப்ட்யூன் கோள்கள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதற்கு இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு வரை ஆகலாம். அது அவரவர் இருக்கும் இடத்தைப் பொருத்தது. அதன் பிறகு மேலும் சில மணி நேரங்களில் செவ்வாய், வியாழன், யுரேனஸ் கோள்களும் இவற்றுடன் அணிவகுக்கும். சூரிய உதயத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு செவ்வாய் மறைந்து விடும்.
பொதுவாகவே ஒன்றிரண்டு கோள்கள் ஒன்றாக நெருங்கி வரும். அதனை வானில் அவ்வப்போது காணலாம். ஆனால் இப்படி ஏழு கோள்கள் ஒன்றாக அணிவகுத்து வருவதும், இரவு நேரத்தில் பார்க்க முடிவதும் வழக்கமான ஒன்றல்ல. அதுவும், கோடு போட்டது போல, ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்களும் ஒன்றாக அணிவகுப்பதும் அதிசயமான நிகழ்வு.சூரியனைக் கோள்கள் சுற்றி வரும் பாதையானது, வானத்தின் குறுக்கே இருப்பதாக ஒரு கற்பனைக் கோடு. இந்தப் பாதையை 'கிரகணம்' என்று அழைக்கிறார்கள். சூரியனைச் சுற்றிக் கொண்டிருந்த வாயு மற்றும் தூசுகள் சேர்ந்து தட்டையாக உருவானதுதான் நமது பூமி மற்றும் இதர சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள். அதனால்தான் அவை சூரியனை ஒரே பாதையில் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
எப்போதெல்லாம், வானில் இந்த கோள்களில் ஒன்றிரண்டு தென்படுகிறதோ, அவை இந்த சுற்றுப்பாதையில் பயணிக்கும் போது தான் வானில் தெரிகிறது. இந்தப் பாதையை வைத்துத் தான், வானில் தெரிவது நட்சத்திரமா, கோள்களா என்று கண்டறிகிறார்கள். இந்நிலையில், சூரியனைச் சுற்றிவரும் பாதையில் ஒரே இடத்தில் கோள்கள் அணிவகுப்பது மட்டும் எவ்வாறு தனித்துவமான நிகழ்வாக மாறியிருக்கிறது. அதாவது, நாம் செவ்வாய்க் கோளை பார்க்கப் போகிறோம் என்றால், நமக்குப் பின்னால் சூரியன் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!