நாளை  இந்தியன் 2 தமிழகம் முழுவதும் 5 காட்சிகள்...  தமிழக அரசு அனுமதி!

 


உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த திரைப்படம் நாளை ஜூலை 12ம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படம் லைகா நிறுவன தயாரிப்பில், ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ளது. இந்நிலையில்  நாளை திரைக்கு வரவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்துக்கு நாளை ஒரு நாள் அதாவது ஜூலை 12ம் தேதி மட்டும்  சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.


ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996ல்  வெளியான திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படத்தில்  சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உட்பட பலர்  நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருந்தது. இந்நிலையில் இந்தியன் 2வது பாகம் இந்தியன் 2 என்ற பெயரில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் உருவான இப்படம் நாளை  திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இதையடுத்து சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி   லைகா நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு  தற்போது 'இந்தியன் 2' திரைப்படத்துக்கு நாளை ஒரு நாள் ஜூலை 12ம் தேதி மட்டும்  மட்டும் சிறப்புக் காட்சி திரையிட அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, இந்தியன்-2 திரைப்படம் வெளியாகும் நாளான நாளை ஒரு நாள் மட்டும், 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி  நாளை 12 ம் தேதி காலை 9 மணி முதல், மறுநாள் 13ம் தேதி அதிகாலை 2 மணி வரை ஐந்து காட்சிகள் திரையிடலாம் என இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை உள்துறை செயலர் பி.அமுதா பிறப்பித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!