undefined

நாளை  தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள்.. ஊருக்கு கிளம்ப தயாராகிட்டீங்களா.. ?!

 

வார இறுதி நாட்களில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை  இயக்கி வருகிறது. அந்த வகையில் நாளை அக்டோபர் 6ம் தேதி  , மறுநாளும்  சிறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  அக்டோபர் 7 மற்றும் 8ம் தேதி வரும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  அதன்படி தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு  நாளை வழக்கமாக இயக்கப்படும்  பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளையும்,   பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 600 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.  

அதே போல் ஞாயிற்றுக்கிழமை தென் மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் செல்பவர்களின் வசதிக்காக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 5,896 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தொலைதூர பயணம் மேற்கொள்பவர்கள்  பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் தேவைகளை பொறுத்து மேலும் கூடுதல்சிறப்பு பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறப்பு பேருந்து சேவையினை பயன்படுத்தி, தங்களது பயணத்தினை திட்டமிட்டுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!