undefined

 

இன்று ஐப்பசி அமாவாசை... தர்ப்பண நேரத்தில் இதைச் செய்ய மறக்காதீங்க!

 
இன்று ஐப்பசி மாத அமாவாசை தினம். மாதந்தோறும் அமாவாசை திதி வருகிறது என்றாலும் புரட்டாசி, ஆடி, தை, ஐப்பசி மாதங்களில் வருகின்ற அமாவாசை தினங்கள் மிக முக்கியமானவை என விரதம் இருக்கிறோம். அதே போல் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை திதியும் முக்கியமானது.

ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு நம்மைப் பார்க்க கிளம்பி வருவதாக ஐதீகம். மகாளாய அமாவாசையில் பூலோகம் வந்தடைகிறார்கள். மகாளய பட்ச காலத்தில் பூமியில் தங்கி அருள் புரிகிறார்கள்.

பித்ருக்களுக்கு எவன் ஒருவன் தனது கடமையை மறக்காமல் செய்து வருகிறானோ அவனை மட்டுமல்லாமல், அவனது சந்ததியினரையும் தழைக்க செய்து வாழ வைக்கும். அமாவாசையன்று எதையெல்லாம் செய்ய கூடாது? எதை செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க. அமாவாசை திதியில் விரதம் இருந்து தர்ப்பணம் செய்பவர்கள், அன்றைய தினத்தில் வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும். முன்னோர்களுக்கு திதி கொடுத்த பின் கோலமிடலாம். முன்னோர்கள் படங்களுக்கு துளசி சாற்ற வேண்டும். 


அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு, பித்ருக்கள் நல்லருள் வழங்குவதாக ஐதீகம். ஐப்பசி  மாதத்தில் நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கங்கை தேவி வாசம் செய்கிறாள். இந்த மாத அமாவாசை தினத்தில் திதி கொடுத்து, நீர் நிலைகளில் குளிப்பது நன்மை தரும். நமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து நமக்கு நல்லருள் புரிய வேண்டி வழிபாடு செய்வதே தர்ப்பணம்.

தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலையில் முன்னோர்களுக்கு படையல் போட்டு விட்டு சாப்பிடலாம். இவற்றுடன்  தர்ப்பணம் கொடுத்து முடித்தவுடன் பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவு அளிப்பது கூடுதல் பலன்களை தரும். அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் சிறப்பு. அதனால், அமாவாசை விரதம் இருப்பவர்கள் இதை எல்லாம் செய்ய மறக்காதீங்க. பித்ருக்களின் ஆசி என்றென்றுடன் உங்கள் குடும்பத்தைக் காக்கும்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!