undefined

இன்று செல்வ வளம் தரும் சனி பிரதோஷம்... எப்படி விரதம் இருந்து வழிபடுவது?!

 
இன்று செல்வ வளம் தரும் சனி பிரதோஷ தினம். பிரதோஷங்களில், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் விசேஷமானது. தாருகா வனத்து ரிஷிகள் கர்வத்தால் தலை எது கால் எது என புரியாமல் ஆணவத்தில் ஆடிய போது சிவபெருமான் பிட்சாடனராக வந்து அவர்களுக்குப் பாடம் புகட்டினார். கர்வத்தைத் தொலைத்த ரிஷிகள், பிரதோஷ நாளில் கடும் தவமிருந்து, விரதம் மேற்கொண்டு சிவ பூஜைகளைச் செய்து முக்தி அடைந்தனர் என்கிறது புராணம். அதனால் தான் பிரதோஷ பூஜை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் தனி மகத்துவம் வாய்ந்தது.

சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்து மனமுருகி பிரார்த்தனை செய்வதால், சகல பாவங்களும் விலகி, சகல செளபாக்கியங்களும் பெற்று புகழோடு வாழலாம் என்பது ஐதிகம். பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை அள்ளித் தரும். சனிப் பிரதோஷ நாளில், முப்பத்து முக்கோடி தேவர்களும் நந்தியின் கொம்புகளுக்கிடையில் நடைபெறும் சிவநடனத்தைத் தரிசிக்க பூலோகம் வருவார்கள் என்பது நம்பிக்கை. பிரதோஷ பூஜைக்கு நம்மால் இயன்ற அளவு அபிஷேகப் பொருட்களையும்,வில்வம், பூக்களை வழங்கலாம்.

இன்றைய தினம் மாலை 4.30 லிருந்து 6 மணி வரை சிவாய நம என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ள ஏழுதலைமுறை பாவங்களும் நீங்கப் பெறலாம் என்கிறது சிவபுராணம்.

மற்ற பிரதோஷ நாட்களில் சிவ தரிசனம் செய்வதைக் காட்டிலும் சனிப் பிரதோஷ நாளில் செய்தால், மும்மடங்கு பலன்களைப் பெறலாம் என்பது ஆச்சார்யப் பெருமக்கள் வாக்கு. இன்று சனிப் பிரதோஷ நாளில் மாலையில் சிவ தரிசனம் செய்வோம். சிவாயநம சொல்லுவோம். சகல பாவங்களில் இருந்தும் விடுபடலாம்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா