undefined

இன்று புரட்டாசி ஞாயிறு... தமிழகம் முழுவதும் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்!

 

இன்று புரட்டாசி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் எப்போதும் அதிகாலை முதலே பரபரப்பாக காணப்படும் இறைச்சி கடைகளும், மீன் மார்க்கெட்களும் வெறிச்சோடி காணப்பட்டன. பலருக்கும் ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு கொண்டாட்டமாகவே விடியும். காலையிலேயே எழுந்து மீன் வாங்க மார்க்கெட்டுக்குப் புறப்படுவதில் துவங்கி, கறிகடைகளில் வரிசையில் நின்று நல்ல கறித்துண்டுகளாகப் பார்த்து வாங்குவது வரை கொண்டாட்டம் தான். இன்னும் சிலருக்கு ஞாயிறுகளின் மதிய வேளையில் வா குவார்ட்டர் கட்டிங் வித் வீட்டு அசைவ சாப்பாடு.

அத்தனையும் புரட்டாசி மாத பிறப்பையடுத்து மாறி இருக்கிறது. இன்னும் ரெண்டு வாரம் தான் என்று இருக்கிறார்கள். புரட்டாசி மாதத்தையடுத்து சைவ உணவு பழக்கத்திற்கு மக்கள் மாறியதால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது ஐதீகம். பெருமாளை வழிபடும் பக்தர்கள் மட்டுமல்லாது, பொதுவாகவே புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து, விரதம் இருப்பவர்கள் சைவ வகை உணவுகளை இந்த ஒரு மாதமும் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

நேற்று புரட்டாசி மாத சனிக்கிழமை என்பதால், பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருப்பதியில், பெருமாள் தரிசனத்திற்காக பக்தர்கள் 20 மணி நேரம் வரையில் வரிசையில் காத்திருந்தனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதுமே இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். கொரோனா காலங்களில் கூட, மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் இதன் காரணமாகவே திறப்பதற்கு அனுமதிக்கப்படாமல் இருந்தது. அப்போதும் விடாமல் பலரும் சனிக்கிழமையே வாங்கி, பிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சமைத்தனர். இந்நிலையில், தற்போது இறைச்சி விற்பனை எதிர்பார்த்ததைவிட மந்த நிலையில் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!