undefined

இன்று பங்குனி உத்திரம்... இந்த வழிபாடு செய்ய மறக்காதீங்க... எவ்வளவு சிறப்பு வாய்ந்தது தெரியுமா?

 

இன்று பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு, உங்கள் குலதெய்வத்தை நேரில் சென்று வழிபட  முடியாவிட்டாலும், வீட்டில் வழிபடுபவர்கள் எதை மறந்தாலும் இன்றைய தினம் வீட்டில் இருந்தப்படியே மறக்காம குலதெய்வ வழிபாட்டை செய்யுங்க. பங்குனி உத்திரத்தன்று செய்யும் குலதெய்வ வழிபாடு இரண்டு மடங்கு பலன்களைத் தரும். பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்திற்கு அதிக சிறப்புகள் உண்டு. குல தெய்வ வழிபாடு தான் உங்கள் குலத்தைக் காக்கும். 

தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியும், கடைசி நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாளே பங்குனி உத்திரம். தெய்வங்களின்  திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் ஆதலால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. பங்குனிஉத்திர நாளில் மேற்கொள்ளப்படும் விரதம்  கல்யாண விரதம். 


சிவபெருமான் அன்னையை திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்தது  இதே நாளில் தான். மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். 

தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்- ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி இந்த நாளில் கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து வீட்டிற்கு அருகில் உள்ள கோவில்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் விரைவில் திருமண யோகம் கைகூடும் என்பது நம்பிக்கை.

திருமால் கன்னிகா தானம் செய்து வைக்க பிரம்மன் வேள்வி நடத்த சொக்கநாதரான சிவன் மீனாட்சியம்மையை பங்குனி உத்தரத்தில் மணக்கிறார். பங்குனி உத்திரவிரதம் மேற் கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும். பங்குனியில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கும் மாதம். பனியும், வெப்பமும் இணையும் மாதம். இந்த மாதத்தில் வசந்த விழா ஆலயங்களில் அனுஷ்டிக்கப்படும். பங்குனி உத்திர விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் கடன் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!