நகைப்பிரியர்கள் உற்சாகம்... 3 வது நாளாக தாறுமாறாக சரிந்த தங்கம் !

தமிழகத்தில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் என்பதால் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். இது ஒரு புறம் இருக்க உலக அளவில் தங்கத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்ற நிலையில் தற்போது வரை 20 முறை தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கத்தின் விலையானது தினமும் புதிய உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ 10000 வரை அதிகரித்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தங்கத்தின் விலை அதிரடி சரிவை சந்தித்துள்ளது.
சென்னையில் கடந்த சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது
தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ 25 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ8285க்கும், சவரனுக்கு ரூ 200 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ66280 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சரிந்து வருவது நகைப்பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ2200 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!