undefined

 அடுத்தடுத்து முகூர்த்த தினங்கள்.. எகிறிய தங்கம் விலை... சவரனுக்கு ரூ. 400 உயர்வு!

 
 

ஆடி மாதம் முடிந்து அடுத்தடுத்து முகூர்த்த தினங்கள் வரும் நிலையில், சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி ஆபரணம் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து அதிர்ச்சியளித்தது. கடந்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்தது.

மேலும் தங்கத்தின் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக  தங்கம் விலை அடுத்தடுத்து உயர்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் சவரனுக்கு ரூ.5,000 வரை குறைந்த தங்கம் விலை அதன் பின்னர் தொடர்ந்து அவ்வப்போது ஏற்றம் கண்டு வருகிறது. 

இந்நிலையில், அடுத்தடுத்து சுபமுகூர்த்த தினங்கள் வரவுள்ள நிலையில், இன்று காலை நேர விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதே போன்று ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.400 உயர்ந்து சவரன் ரூ. 53,760க்கு விற்கப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.92க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை