வாரத்தின் முதல் நாளே உற்சாகம்... தாறுமாறாக சரிந்த தங்கம்!
நவம்பர் மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சவரனுக்கு ரூ.3000 உயர்ந்துள்ளது. 2025 இறுதிக்குள் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயை எட்டி விடும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக அக்டோபரில் இதுவரை இல்லாத வகையில் சவரன் ரூ60000 என்ற புதிய உச்சத்தை தொட்டது. டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது.
அடுத்த சில நாட்களில் தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக 10 நாட்களில் ரூ 4200 வரை சவரனுக்கு தங்கத்தின் விலை குறைந்தது, இது தான் நல்ல சான்ஸ் என மக்கள் தங்கத்தை வாங்கினர்.
அதற்கு ஏற்றாற் போல அடுத்தடுத்த நாட்களில் விலை கடுமையாக உயர்ந்தது. அந்த வகையில் ஒரு சவரன் ரூ55480 என்ற விலையில் விற்பனையான நிலையில் இருந்து படிப்படியாக அதிகரித்து ரூ 58,400 வரை சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஒரே வாரத்தில் சுமார் ரூ 3000 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். ரஷ்யா-உக்ரைன் போரால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மத்திய வங்கியின் தங்கம் கொள்முதல் மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதக் குறைப்பு போன்ற காரணங்களால், தங்கத்தின் விலை 2025ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் ரூபாயை எட்டும் எனக் கூறப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ 600 உயர்ந்து ரூ 58,400 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கிராமுக்கு ரூ 100 தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அந்த வகையில ஒரு கிராம் ரூ7200 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரனுக்கு ரூ 800 குறைந்து ரூ 57600 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!