undefined

வார இறுதி நாளில் ரூ58000ஐ கடந்த தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!  

 

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நவம்பர் மாத தொடக்கம் முதலே ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது . அதே நேரத்தில் நவம்பர் 18ம் தேதி  முதல் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. விலை குறைந்த நேரத்தில் நவம்பர் 17ம் தேதி  ஒரு சவரன் ரூ.56000க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து நவம்பர் 19 முதல்  மீண்டும் ரூ.56000ஐ கடந்தது.

இந்நிலையில் நவம்பர் 21ம் தேதி நேற்று முன்தினம் ரூ.57000ஐ கடந்தது.  நேற்றும் விலை  அதிகரித்து  ஒரு கிராம்  ரூ.7225க்கும், ஒரு சவரன் ரூ.57800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதன் மூலம் தங்கத்தின் விலை ரூ.58000ஐ கடந்தது. இதன்படி  கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு  ரூ.2320 அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்றைய விலை நிலவரப்படி  ரூ கிராமுக்கு 75  அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ. 7,300க்கும் சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 58,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ 2,920 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலையை பொறுத்தவரை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ101க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ101000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!