தாறுமாறாக சரிந்த தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
தங்கத்தின் விலையை பொறுத்தவரை அக்டோபர் முதல் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஒரு நாளில் புதிய உச்சம் தொடும் தங்கம் அடுத்த நாளே இறங்கத் தொடங்கி கண்ணாமூச்சி காட்டி வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ165 குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7200க்கும், சவரனுக்கு ரூ1320 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ57600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ3 குறைந்து ஒரு கிராம் வெள்ளி விலை 102க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ1,02,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பட்ஜெட்டில் வரி குறைக்கப்பட்டதன் காரணமாக தங்கத்தின் விலை திடீரென குறைந்து இல்லத்தரசிகளை உற்சாகப்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர தொடங்கி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் ஆபரண தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜூலை மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்த நிலையில் அதன் பின்னர் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதும், மளமளவென சரிந்தது. இறக்குமதி மீதான வரி குறைந்ததும் ஒரு சவரன் தங்கம் ரூ.51,000க்கும் கீழாக சரிந்தது. மேலும் தங்கத்தின் விலை குறையும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. தங்கத்தின் விலை உயரும் போது அதிகளவில் உயர்வதும், சரியும் போது சொற்பமாக சரிவதும் என போக்கு காட்டி வருகிறது.
பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் நகையாக மட்டுமின்றி பெரும் சேமிப்பாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில், சமீபகாலமாக தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே சென்றது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் இனி வாங்கவே முடியாதோ என்ற நிலை உருவானது.
இதனால், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தங்கம் விலையை குறைக்க ஏதேனும் அறிவிப்பு வருமா? என மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதம் மத்திய அரசு குறைப்பதாக அறிவித்ததும் நகைப்பிரியர்கள், தங்கத்தின் மீதான முதலீட்டாளர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். தங்கத்தின் மீதான இறக்குமதி வரியுடன் வெள்ளி, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபரணங்கள் விலை கணிசமாக குறையலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!